கம்பனில் தோழமை
தமிழைப் போல
நட்புக்கும் தூய்மை உண்டு!
அமிழ்தைப் போல
நட்பிலும் இனிமை உண்டு!
கற்பைப் போல
நட்புக்கும் திண்மை உண்டு!
நிலவைப் போல
நட்பிலும் தண்மை உண்டு!
இனிமையும் நீர்மையும் மட்டுமல்ல
தோழமையும் தமிழெனல் ஆகும் எனத்
தோள் தட்டி வந்த நட்பு
கம்பனின் காவிய நட்பு!