4.7.11

என் இதய நாதம்......

வணக்கம்!
      சங்கநாதம் வலைப்பதிவிற்கு வருகை தந்துள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.இது ஓர் இலக்கிய வலைப்பதிவு.இலக்கியக் கட்டுரைகளும் கவிதைகளும் இதயம் கவர்ந்த இலக்கியத் தொடர்களும் இங்கே இடம் பெறும்.தேமதுரத் தமிழோசை இங்கே சங்கநாதமாக ஒலிக்கும்.வாருங்கள்.....உங்கள் இதயக் கருத்துக்களைப் பதிவு செய்து சங்கநாதத்தை இன்னும் இனிமையாக்குங்கள்.......! நன்றி!!! 
அன்புடன்
இரா.சுதமதி

30.6.11

தமிழின் இனிமை

கனியிடை ஏறிய சுளையும்- முற்றல்
      கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும்- காய்ச்சுப்
      பாகிடை ஏறிய சுவையும்
நனிபசு பொழியும் பாலும்- தென்னை
      நல்கிய குளிரிள நீரும்
இனியன என்பேன் எனினும்- தமிழை
      என்னுயிர் என்பேன் கண்டீர்!
                                                                                           -பாரதிதாசன்